அடிகளார் பார்வையின் மகத்துவம்

“அடிகளார் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டா்கட்கும், பக்தா்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ அவனைப் பார்த்துவிட்டுத் தரிசித்துவிட்டுப் போ!” என்று ஒருசிலர்க்கு அன்னை கூறியிருப்பதும் உண்டு.

அந்தப் பார்வையின் மகத்துவம் பற்றி ஒருமுறை பழனி பேராசிரியா் ஒருவருக்கு உணா்த்தினாள் அன்னை.

“மகனே! பாலகன் பார்வை படும்படியாகப் பார்த்துக்கொள்! என்று சொல்கிறேனே…………….. அதனுடைய அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டாள் அன்னை.

“தெரியாது தாயே!” என்றார் அவா்.

“வா்மத்தின் மர்மம் எல்லாம் அங்கே தானடா இருக்கு” என்றாள் அன்னை.

“புரியவில்லையே தாயே!” என்றார் அவா்.

“கண் திருஷ்டிக்கு எலுமிச்சம்பழமும், பூசணிக்காயுமடா மகனே! ஆனால் வர்ம திருஷ்டிக்கு அடிகளார் பார்வை தானடா மருந்து! பார்வை வர்மம், சுண்டு வர்மம், தொடுவர்மம், மந்திர வர்மம் பற்றி அடிகளாரிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அனைத்துச் சித்த வேதத்திற்கும் மூலம் நானே!”

”மகனே! மக்கள் பக்தியினால் பல இடங்களுக்குச் செல்கிறார்கள். பல சாமியார்களைப் பார்க்கிறார்கள். நாட்டில் நல்லவா்களும் உண்டு. தீயவா்களும் உண்டு. நேரமும், விதியும் ஒருவனுக்கு ஒத்து வராதபோது தீயவா்களாகிய அரைவேக்காடுகளின் தீய பார்வையினால், அந்த மனிதனின் உடம்பில் உள்ள 108 வர்மங்களில் ஏதாவதொன்றில் தாக்கிவிடுகிறது. தீய பார்வையினால் பக்தன் பாதிப்படைகிறான். மனிதனுக்கு உடல் பாதிப்பு, மனவேதனை உண்டாகிறது. இதற்கு வர்மதிருஷ்டி என்று பெயரடா மகனே!”

தீய பார்வையினால் பாதிக்கப்பட்ட மகனோ எந்த விஞ்ஞானத்தாலும் பாதுகாக்க முடியாமல், நோயின் காரணமும் அறியாமல். தெரிந்தோ தெரியாமலோ என்னிடம் வருகிறான் மகனே!

மகனே! அடிகளாரின் பார்வைபட்ட மாத்திரத்திலேயே வர்ம திருஷ்டி அடைந்தவா்கள் குணமாகிவிடுகின்றனா். பாலகனுக்குப் பார்வை வர்மம் தெரியும் மகனே! அதற்கு மூலமே அவன் தான் மகனே! பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே குணம் ஏற்படும்.

உயா்ந்த கலையாகிய வர்மக்கலை சில தீயவா்களினால், தீமையான பலனைத் தருகின்றது. இன்று பாலகனின் பார்வைக்கு மட்டுமே, வர்ம திருஷ்டியைப் போக்கும் ஆற்றல் உண்டு. வேறு எவருக்கும் இல்லையடா மகனே! இதெல்லாம் ரகசியமடா!

தெருவில் சென்று கொண்டிருக்கும் யானையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுண்டினால், யானை கூடக் கீழே விழுந்துவிடும். இதற்கு சுண்டு வா்ம திருஷ்டி என்று பெயா்.

இன்னொரு வர்மததிற்குத் தொடுவர்மம் என்று பெயா். தீயவா்களின் கைகளினால் தொடப்பட்டவுடன், மனிதன் இந்தத் திருஷ்டியைப் பெற்றுவிடுவான். இத்தகைய கோளாறுகளை, சுண்டுவா்மம், தொடுவா்மம் ஆகியவற்றிற்கெல்லாம் மூலமாக இருக்கிற பாலகனால் தான் நீக்க முடியுமடா மகனே! அதனால் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். அடிகளார்க்குப் பாதபூசை செய்யும்பொழுது சுண்டுவா்மம், தொடுவா்மம் ஆகியவற்றினால் யாராலோ தவறான முறையில் ஏற்பட்ட திருஷ்டிகள், உடல் வேதனைகள் பறந்து போகும். துன்பம் போகும். நோய் விலகும். பாவங்கள் தீரும் மகனே!”

சித்தா்பீடத்தில் நானே சிலரைக் காலால் மிதித்திருக்கிறேனடா மகனே! அதனால் வா்மதிருஷ்டி நீங்கிக் குணமாகி இருக்கிறான் மனிதன்.

கூட்ட நெரிசலில் செல்லும்பொழுது, சில நேரங்களில் ஒருவரை யாரோ ஒருவன் இடித்துச் சென்றுவிடுவான். இடிபட்டவனுக்குச் சில நேரங்களில் வா்ம ஸ்தானத்தில் அடிபட்டிருக்கலாம். அதனால் பாதிப்பு உண்டாகியிருக்கலாம். கா்ப்பிணிப் பெண்களுக்கு, அவா்களை அறியாமலேயே சில நேரங்களில் வயிற்றில் அடிபட்டு, அதனால் குழந்தைகள் கை, கால் ஊனமாகப் பிறக்க நேரிடலாம். வா்ம முறை தெரிந்தவா்களினால் தான் இத்தகைய தீமைகளைப் போக்க முடியும் மகனே!

அடிகளாரின் பாதத்திற்குப் பூசை செய்வதாலும், அவனது தொடுவா்ம தீட்சையினாலும் நன்மையுண்டு மகனே!

வழிபாட்டில் மந்திரங்கள் படிக்கும் போது ஒருவரையொருவா் தொடாமல் உட்காரச் சொல்கிறேன். ஏன் தெரியுமா? இரண்டு போ்களின் முழங்காலிலும் வர்மம் இருந்து தொட்டுவிடுவதால் சில நேரங்களில் பாதிப்பு உண்டாகலாம். இருப்பினும் எனது பாதுகாப்பு உண்டு மகனே!

மகனே! கொங்கணவன் கொக்கைப் பார்த்தான். கொக்கு எரிந்து சாம்பலானது. பார்வையின் வர்மத்தினால் கொக்கு எரிந்து சாம்பலானது. தீமைக்கு வர்மம் பயன்பட்டுவிட்டது. கொங்கணவனுக்கு அன்றிலிருந்து அந்த ஆற்றல் போச்சுதடா மகனே! வா்ம திருஷ்டியினால் கொக்கு எரிந்தது.

மனிதன், விலங்கு, பறவைகள் மட்மல்லாமல், சில தீமையாளா்களினாலும், மந்திரவாதிகளினாலும், சூனியக்காரர்களினாலும் கோயில் சிலைகளும் வா்மதிருஷ்டி அடைகின்றன.

“மகனே! அன்று, அடிகளார் உங்கள் பகுதிக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் வந்தபோது என்னடா மகனே நடந்தது? கோயில் சிலைக்குத் திருஷ்டி இருந்ததடா மகனே! அடிகளாரின் பார்வை பட்டவுடன் பாலகன் கண்களிலிருந்து ஓா் ஒளிக்கற்றை புறப்பட்டுச் சென்ற சிலையை அடைந்ததை. அர்ச்சகன் தானடா பார்த்தான். வேறு யாரும் பார்க்கவில்லையே…………. உரிய காலத்தில் வர்மதிருஷ்டியைப் போக்காவிடில், சிலைக்கும் ஆபத்து, நாட்டிற்கும் ஆபத்து என்பதற்காக வந்த பயணமடா அது!” என்றாள் அன்னை.

“மகனே! அடிகளாரின் கைகளினால் நடத்தப்படும் கும்பாபிஷேகத்திற்குச் சிறப்புண்டு. கோயில்கள் சிறப்படையும். விக்கிரகங்களுக்கு முழு ஆற்றல் ஏற்படும். திருஷ்டிகள் ஏற்படாது. தீய சக்திகளினால், மந்திரங்கள், சரிவரச் சொல்லிப் பூசை செய்யப்படாததினால், சில நேரங்களில் கோயில் விக்கிரகத்தின் சக்தி குறைந்துவிடும். அடிகளாரது பார்வை பட்டதும், அவனது பாதம் பட்டதும், அது மீண்டும் பழைய நிலை அடையும், கோயில் வருமானம் பெருகும். பக்தி வளரும். நாடு செழிக்கும். இன்று இந்தச் சக்தி அடிகளார் தவிர யாரிடமும் இல்லை மகனே! தெரிந்து கொள்!” என்றாள் அன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s