சித்தர்களின் கொள்கை

சித்தர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தலையாய கொள்கை அன்னதானம்! “அன்னதானம் தான் சித்தர்களுக்கு உவப்பு. அந்த அன்னதானம் தான் ஆதிபராசக்திக்கு உவப்பு” என்பது அன்னையின் அருள்வாக்கு. மேல்மருவத்தூரில் தினந்தோறும் அன்னதானம், அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பேருக்கு அன்னதானம், இருமுடி-சக்திமாலை அணிந்து வருகிற காலங்களில் இலட்சக்கணக்கான பேருக்கு அன்னதானம்.
அருள்திரு அம்மா அவர்களிடம் ஒரு வி.ஐ.பி. கேட்டாராம், இதையெல்லாம் செய்கிறீர்களே, இதற்கென்ன சோர்ஸ் (source -வழி)? என்று.
அருள்திரு அம்மா அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம். “என்ன சோர்ஸ்? இங்கே (எனக்குள்ளே) ஒரு போர்ஸ் (force – சக்தி) தோன்றும். அதை பக்தர்களிடம் சொல்லுவேன். அதுதான் சோர்ஸ். அந்த சோர்ஸ் அப்படியே உருமாறி வருபவர்களுக்கு சோறூஸ் (சோறு – உணவு) ஆகி, எல்லோருக்கும் சோறு போட்டுடுவோம்.” எப்படி வார்த்தைகள்!? இயல்பாகச் செதுக்கி வரும் வார்த்தைகள். நம்மைச் சிந்திக்க வைத்து, செயல்பட வைக்கும் வார்த்தைகள்.
“அருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம் – சக்தி பேராசிரியர் த.சோமசுந்தரம், பூம்புகார்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s