செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??

செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!(செவ்வாடை )
ஓயாமல் மனிதர்கள் கூடி ஓம்சக்தி சொல்வது ஏனோ ?
எல்லோர்க்கும் ஓர் தாய் என்று கூறிடதானோ !!!
எல்லோரும் ஓர் குலம்,எல்லோரும் ஓர் இனம்..
இந்நாளில் காட்டினாலே பங்காரம்மா ….
அம்மாவின் வார்த்தையோ அச்சாணி போலவே
அதன் போக்கில் போவதே நன்மையம்மா …
குருவே பிரம்மா,குருவே விஷ்ணு ,குருவே ஈசன் போலவே
குருவின் வார்த்தை தெளிவை காட்டும் முன்னோர் சொன்ன மொழியிலே !

செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!

குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்

அம்மா : இயற்கையை என்றும் நாம் ஒட்டி வாழவேண்டும் , இயற்கை இல்லையென்றால்
இரையும் கிடையாது ,இறைவனை அடையவும் முடியாது ..இயற்கையை வைத்துதான்
பல அனுபவங்களை தெரிந்து கொள்ள முடியும் ,செயற்கையை வைத்து தெரிந்து கொள்ளமுடியாது .
ஆழிவை தான் தெரிந்து கொள்ள முடியும் .

(இயற்க்கை என்றால் பராசக்தி வடிவம் ,இயற்கையை சீண்ட இழப்பே மிஞ்சும்
ஓங்கார ஒலிதானே காற்று ,அதை மாசுபடுத்துவதே அறிவியல் விளையாட்டு,முன்போல்
வானம் மும்மாரி பொழிவதில்லை அதனால் தான தருமங்கள் வளரவில்லை ,இனியேனும்
அம்மாவின் ஆணைப்படி ,இயற்கையை போற்று இயற்கையை வணங்கு ……..
பஞ்சபூதங்களின் அருள்கிடைக்கும் நமக்கு ,அருள்கிடைக்கும் நமக்கு

காடெங்கும் மரங்களை வெட்டி விலைபேசும் மனிதரை சுற்றி கோபங்கள்
கொண்டது வானம் மழைதான் இல்லை . பஞ்சபூதம் வணங்கா ஊரில்
பஞ்சம் வந்து சேரக்கூடும் ,காற்று நீரும் இல்லாதிருந்தால் உயிர் என்ன ஆகும் ??
ஒரைத்து பூதமும் மருவூரின் மேடையில் விளையாடும் கோலமே அறிவாயப்பா
குருநாதன் போலவே வழிபாடு செய்திடு வருங்காலம் வளமாக ஆகிடுமப்பா..

குருவே பிரம்மா,குருவே விஷ்ணு ,குருவே ஈசன் போலவே
குருவின் வார்த்தை தெளிவை காட்டும் முன்னோர் சொன்ன மொழியிலே !
செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!

குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்

அம்மா :கடமை கடவுளாக மாறவேண்டும்,நாம் சேர்த்து வைத்த பொருள்
நமக்குத்தான் பயன்பட வேண்டும் நம் மக்களுக்குத்தான் பயன்படவேண்டும்
என்று நினைத்தால் தனக்கும் பயன்படாது நம் மக்களுக்கும் பயன்படாது .
(என் கடன் பணிசெய்து கிடப்பது என்று அம்மா எப்பொதும் சொல்வதுண்டு
ஏழைகள் கண்ணீர் துடைப்பதர்கே மன்றங்கள் திறந்தாய் அன்று
அம்மாவின் ஆணைப்படி நான் என்ற சொல்லை செவ்வாடை சொன்னதில்லை
நாம் என்று சொல்ல அது எப்போதும் மறந்ததில்லை ,ஆன்மீக பயிருக்கு
அடிவுரமே சமுதாய தொண்டு என்ற அம்மாவின் வாக்கை மறவாதே !!

உணவுக்கே உழைப்பது கடமை ,ஊருக்கே உழைப்பது பெருமை
ஜெகமாலும் அம்மா வாக்கு இதுதான் உண்மை .
நாணயத்தில் நான் நயம் இல்லை ,காடு செல்லும் காலம் எதுவும் கையில் இல்லை
பொருள் தேடும் நெஞ்சமே அருள் தேடிசெல்லுமே மருவூரில் முப்பது நாளும் மழைகாலமே
பங்காரு நாதனின் பாதாரம் நாளுமே தாயென்னும் தன்மை உன் கையில்வருமே

குருவே பிரம்மா,குருவே விஷ்ணு ,குருவே ஈசன் போலவே
குருவின் வார்த்தை தெளிவை காட்டும் முன்னோர் சொன்ன மொழியிலே !
செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!
குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்

அம்மா : உண்மை உண்மையாக இருக்க வேண்டும் அது ஊமையாக மாறக்கூடாது
அது ஊமையாக மாறிவிட்டால் மனிதனாக பிறந்ததில் அர்த்தமும் இல்ல, அனாதையாக
மாறிவிடும் ,வாழுகிற காலத்தில் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
வாழுகிற காலத்தில் நல்லது செய்யவேண்டும் ,வாழுகிற காலத்தில் தாய் தந்தைக்கு உதவியாக
இருக்க வேண்டும் ,கூடபிறந்தவருக்கு உதவியாக இருக்க வேண்டும் ..

கண் மை மறையலாம் ,கருமை மறையலாம் சிறுமை மறையலாம்
உண்மை மறைந்துவிட்டால் உலகம் சுழலுமோ ??உண்மையின்
உறைவிடம் சக்திபீடம் ,அதன் உணர்வுகள் என்பதோ பங்காரு நாதம்
பங்காரு அன்னையோ பண்படுத்தும் பள்ளிக்குடம் -அதில்
படிக்க வந்த மனிதருக்கு எத்தனை பாடம் ,எத்தனை பாடம் ???

மத்தாப்பு ஜோதிகளெல்லாம் எப்போதும் நிரந்தரமில்லை
தைபூச ஜோதியை நம்பு துயரம் இல்லை -கைகாட்டி
மரங்கள் கூட நம்மோடு வருவதில்லை -குருநாதன்
நிழலோ நம்மை கைவிடவில்லை .
.ஊராட்சி பள்ளியில் மீனாச்சி பாலகன்
தருவாரே பாலபாடம் அறிவாயப்பா,
மருவூரின் மண்ணிலே மனிதாபிமானமே
பயிராகும் அதிசயத்தை நீபாரப்பா….

குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்
செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!
குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்

அம்மா : சிரிப்பிலே சிரிப்புண்டு வஞ்சக சிரிப்புண்டு ஏளன சிரிப்புண்டு
அந்த சிரிபில வாழ்த்துர சிரிப்பும் உண்டு அன்பு செலுத்துற சிரிப்பும் உண்டு
சிரிப்பில் இறைவனை காண்கிறோம் அதிபராசக்தியை காண்கிறோம்
எப்போதும் இறைவனை நம்பனும் ,தர்மத்தை நம்பனும் தாயைனம்பனும் ..

மக்களின் தொண்டே தான் மகேசன் தொண்டு என்று முக்காலம்
விழித்திருக்கும் அம்மாவின் திரு கரங்கள் நடமாடும் கோவில் என
ஏழைகளை காணுமே பசியாறும் தானங்கள் மழைபோல வாழ்த்துமே
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பது இப்படித்தானோ ?
எங்கள் குருநாதருக்கு உயிர் மூச்சே கொடை தானோ ?
அள்ளி அள்ளி அள்ளி கொடுப்பதுதானோ??

ஆகாசம் சிரித்தால் மழையோ பாதாளம் சிரித்தால் விதையோ?
அடிகளாரின் வார்த்தைகளெல்லாம் அறுவடைபயிரோ??
ஏழைகளின் வயிறோ நெருப்பு அதை தண்ணி ஊத்தி அணைக்கிற
பொறுப்பு ஏற்பவர்கள் காண்பாரம்மா இறைவனின் சிரிப்பு ..

நடமாடும் கோவிலாய் நமதன்னை வாழ்கிறாள் எப்போதும்
ஏழைகளின் தாயாகவே -தானங்கள் செய்திடு நான் அங்கு வாழ்கிறேன்
என்று ஒதுகிறாய் தினந்தோறுமே ..

குருவே பிரம்மா,குருவே விஷ்ணு ,குருவே ஈசன் போலவே
குருவின் வார்த்தை தெளிவை காட்டும் முன்னோர் சொன்ன மொழியிலே
செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!
குருவே ஓங்காரம் குருவே ஆதாரம் குருமொழி திருமொழி ஆகும்
ஆதிசக்தி குருவின் வடிவாகும் ஆவளின் வார்த்தை கேட்போம்

அம்மா : மணியடித்து சாப்பிடும் காலமாகிவிட்டது ,நெல்மணி அடித்து
சாப்பிடும் காலம் வர வேண்டும் .அந்த பழைய காலம் பொற்காலம் அமையனும்
உடலுக்கு ஏற்ற மாத்திர உழைப்பு நல்ல எண்ணங்கள் இருந்து நல்ல செயல்களை செய்யும் போது எல்லாம் நல்லதாக முடியும் .
மணியடிக்கும் ஓசையிலே மலர்ந்து வரும் ஓங்காரம்.ஓங்காரம் உள்ளிருந்து
பேசுவது நம் தாயாகும் ,சேற்றிலே கால் வைத்தல் சோற்றிலே கை இருக்கும்
சோம்பலாய் நீ இருந்தால் சொர்க்கமா உனக்கு கிடைக்கும் உழைத்தல் தான்
சாப்பாடு ஊருக்கும் நீ போடு ,அம்மா சொன்னாலே அதை கேட்ட்போம் பணிவோடு
ஆணை கட்டி சோரடிதலும் பானை சோறு நிறைந்திட வில்லை ,
வீணாதி வீரர்கலாலே விளைச்சல் இல்லை ,மாடு கட்டி போரடித்தாலும் மனிதன்
தேவை தீர்ந்திடவில்லை காலம் கெட்டு போனது என்று அம்மா கவலை
உழையாது ஊரிலே விளையாது மானிடா, உலகாளும் அன்னையோ உண்மை சொன்னாள்
மருவூரால் பேச்சிலே ஒரு ஏக்கம் உள்ளதே பொற்க்காலம் மீண்டும் வரும் நாளும் என்னாள்??
குருவே பிரம்மா,குருவே விஷ்ணு ,குருவே ஈசன் போலவே
குருவின் வார்த்தை தெளிவை காட்டும் முன்னோர் சொன்ன மொழியிலே !
செவ்வாடை சுடுவதேனோ ??செந்தூரம் பூசுவதேனோ ??
எல்லோரும் ஒரு நிறமென்றே கூறிடதானோ!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s