தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன!

ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்!

3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு “அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்” உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்!

4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – “தெய்வீக நிர்வாகம்” நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்!

6. சமுதாயத் தொண்டுகளுக்கும், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்!

7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் “ஒரே தாய்!! ஒரே குலம் !!” என்ற ஒரே சிந்தனையுடன் “செந்நிற” ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்!

8. ‘சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!” என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்!

9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, “சப்தகன்னிமார்களுக்கு ” சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்!

10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்!

11. “உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!” என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு – தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்!

இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் “தொண்டு” -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

சரி, மருவத்தூரில் அம்மா எங்கே இருக்கிறாள்!

மருவத்தூரில் ‘அம்மா’ ஒவ்வொரு மண் துகளிலும் இருக்கிறாள்!

மருவத்தூரில் வீசுகின்ற காற்றில் ‘அம்மா’ கலந்திருக்கிறாள்! மருவத்தூர் மண்ணிற்கு மூலாதார சக்தியாக இருக்கும் அருள் திரு. அடிகளார் அவர்களின் தேகத்தில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் ஆன்மாவில் ‘அம்மா’ இருக்கிறாள் !அடிகளாரின் ஆன்மாவில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் குரலில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் பார்வையில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் செய்கையில் ஒவ்வொன்றிலும் ‘அம்மா இருக்கிறாள்!

மொத்தத்தில் – அடிகளாரே அம்மாவாக இருக்கிறார்! அம்மாவே அடிகளாராக இருக்கிறாள்!

அந்த “அடிகளாருக்குள் வாழும் அம்மா” -வின் தரிசனம் நமக்கு எப்போது கிடைக்கும்?

“அடிகளார் பார்வை படுமாறு நின்று கொள்ளுங்கள்!” – என்று அம்மா அருள்வாக்கில் சொன்னதை நம்பி… “அம்மா” ஆலயத்தைச் சுற்றி வரும் போது, நாமெல்லாம் முண்டியடித்துக் கொண்டு நின்றால்….

எல்லோருக்குமா ‘அம்மா’ பார்வை கிடைத்து விடுகிறது? ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏன் அப்படி?

அன்னை கூட பாரபட்சம் காட்டுகிறாளோ?

சத்தியமாக இல்லை!

அம்மாவையும் குருவையும் மனதில் பூஜித்தபடி இடைவிடாமல் “தொண்டுகள்” செய்யும் பக்தர்களுக்கே அம்மா முதலிடம் கொடுக்கிறாள்!

அன்னையின் தொண்டுகள் ஆற்றிவரும் தொண்டர்கள் ஒவ்வொரு வினாடியும் “அம்மாவை” ஒரு வகையில் தரிசித்து தான் வருகிறார்கள்!

அது எப்படி?

1. கருவறையில் மட்டும் “அம்மா” இல்லை! கழிவறையை சுத்தம் செய்யும் போது கூட தொண்டன் அருகே அம்மா அங்கே இருக்கிறாள்!

2. “குரு தரிசனம்” செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்து கொண்டிருந்த பணியைப் பாதியில் விட்டு விட்டு ஒடினால்.. குரு காணிக்கை கொடுத்தாலும் கிடைக்காதே “அம்மா” தரிசனம்?

3. “அம்மாவின் அங்கப்பிரதட்சணத்தை பார்க்க வேண்டும்”- என்று செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே போடு விட்டு ஓடியவர்கள் அம்மாவின் அங்கப்பிரதட்சணத்தைப் பார்க்க முடியவில்லை! ஆனால் “பணி நடக்கின்ற இடத்தில் அம்மா கண்டிப்பாக இருப்பாள்” என்று நம்பி பணி செய்தவர்களுக்கு – கனவில் அங்கப்பிரதட்சணத்தை அன்னை காட்டியது உண்டு!

4. தொண்டர்களின் ஒரு சிலர் 24 மணி நேரமும் அன்னையை நினைத்த படி மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தங்கள் குடும்ப கடமைகளை செய்து வருவார்கள் இவர்கள் கூட உண்மையான சக்தி தொண்டர்கள் தான்! இவர்கள் தாங்கள் செய்கின்ற ‘கடமையில் ‘அம்மாவை தரிசிப்பவர்கள்!

5. சொந்த ஊரில் இருக்கும் போது, நம் எல்லோருக்குமே அன்னையின் பணிகள் செய்ய ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன!

*மன்றக் கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்வது.

*மன்றத்தின் வாயிலாக சமுதாயப் பணிகள் செய்து அன்னையின் புகழினைப் பரப்புவது.

*வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் , ஆடைதானம் செய்து , ஏழை எளியவர்களின் மனம் குளிர வைப்பது.

*ஏழை எளியவர்களுக்கு சக்திமாலை அணிவித்து மருவத்தூர் அழைத்து வருவது

* மாவட்டப் பிரச்சாரக்குழு செய்கின்ற பெரிய சமுதாயப் பணிகளில் கலந்து கொண்டு, தன்னால் முடிந்த பணிகளை செய்வது.

இந்த அரிய வாய்ப்புகளையெல்லாம் விட்டு விட்டு மருவத்தூர் வரும் போது மட்டும் – ஆலயத்தைச் சுற்றிக் கிடக்கும் நாலைந்து குப்பைகளைப் பொறுக்கி விட்டால் “அம்மா” வை பார்த்து விடலாம் என்று நினைத்தால்… “அம்மா ” தரிசனம் எப்படி கிடைக்கும்?

5. எந்த வித பணியும் செய்யாமல், மாதத்திற்கு ஒரு முறை மருவத்தூர் வந்து அம்மாவை “தரிசிப்பவர்கள்” இருக்கிறார்கள். வருடம் முழுவதும் அம்மா பணிகளை தங்கள் சொந்த ஊரில் ‘ உடல் நோக ‘ செய்து விட்டு, வருடத்திற்கு ஒரு முறை மட்டும் இருமுடி ஏந்தி வந்து அச்சரப் பாக்கம் எல்லையைத் தொடுகின்ற பாமர ஜனங்களும் இருக்கிறார்கள்! அந்த அப்பாவி ஜனங்களுக்கு தரிசனம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அம்மா, இருமுடி செலுத்தியவர்கள் எல்லோரையும் ‘அடிகளார் அலுவலகத்திற்கு ‘ வரச் செய்து ‘ அருள் தரிசனம்’ கொடுக்கிறாள்!

உண்மைக்கே பணி செய்து, நொந்து போய் வந்தவர்களுக்கு மட்டும் – அந்த அருள்பார்வை “நல்ல டானிக்” மாதிரி!

மருவத்தூர் அன்னை ‘தொண்டிற்கு’ அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாள்.

அருள்திரு. அடிகளார் அவர்கள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்திலும் எதுவும் பேசுவதில்லை! இலட்சக்கணக்கான சக்தி தொண்டர்களை வழி நடத்தும் நமது ஆன்மீக குருவால்- தனது கொள்கைகளை, இலட்சியங்களை உலக மக்களுக்கு “பேசாமல் ” எப்படி தெரிவிக்க முடிகிறது?

சக்தி தொண்டர்கள் செய்யும் தொண்டுகள் மூலம் தான் செவ்வாடைத் தொண்டர்களின் நோக்கங்கள் அன்னையால் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன!

எனவே-

நாம் செய்கின்ற “தொண்டுகளில் தான்” அன்னை இருக்கிறாள்! என்ற உறுதியான முடிவுக்கு வருவோம்!

நாம் செய்கின்ற ‘ஆலயத் தொண்டுகள்’ அன்னையைச் சேரும் போது “அம்மா தரிசனம் ” நமக்கு கிடைக்கின்றது!

நாம் செய்கின்ற ‘சமுதாயத் தொண்டுகள்’ ஏழை மக்களிடம் போய் சேரும் போதும் “அம்மா தரிசனம் ” நமக்கு கிடைக்கின்றது!

அம்மா எங்கே இருக்கிறாள்?

அம்மா, நாம் செய்யும் தொண்டுகளில் இருக்கிறாள்!

தொண்டுகள் செய்வோம்!

அன்னையை தரிசிப்போம்!!

தரிசித்து, வேண்டுகின்ற வரங்கள் யாவும் பெறுவோம்!!

ஓம் சக்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s