தாமஸ் அல்வா எடிசன்

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் ‘மக்கு’ என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.

எடிசன் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும், ஓர் ஆசிரியைக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847ல் அமெரிக்காவிலுள்ள ‘மிலன்’ எனும் ஊரில் பிறந்தவர். ‘எதற்கும் உதவாதவன்’ என்று பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட எடிசன் தன தாயாரிடமே அடிப்படைக் கல்வியை கற்றார். தன பதிமூன்றாவது அகவையில் கிராண்ட் டிரங்க் தொடர்வண்டி சாலையில் செய்தித்தாள் போடும் பையனாக சேர்ந்தவர், அங்குள்ள சரக்கு ஏற்றும் பெட்டியை வேதியியல் சோதனைச்சாலையாக மாற்றியும், அங்கேயே ஒரு அச்சகத்தை தன தந்தையின் உதவியால் நிறுவி ‘கிரான்ட் டிரங்க் ஹெரல்ட்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். சோதனைச் சாலையில் பற்றிய ‘தீ’ அவர் செயற்கூடத்தை நாசமாக்கவே அமெரிக்காவில் எங்கெல்லாம் ‘தந்தி செயலி’ வேலை கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடோடி வேலை செய்தும் தன் சோதனை முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர் போஸ்டனிலுள்ள ‘வெஸ்டர்ன் பணமாற்று’ அலுவலக பணியையும் மறுத்துவிட்டு முழு நேர‌ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் எடிசன்.

தன் முதல் கண்டுப்பிடிப்பான ‘மின்சார வாக்குப்பதிவு’ இயந்திரத்திக்கு 1869ம் ஆண்டு காப்புரிமை கிடைத்தும் அரசியல்வாதிகள் அதை செயற்படுத்த விருபவில்லை. இதை எண்ணிப் பார்த்த எடிசன் ‘மக்களுக்கு வேண்டாத பொருட்களை கண்டுப்பிடிப்பதில் நேரத்தை வீணாக்கக்கூடாது’ என மக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்களைக் கண்டறிந்தார். தன் கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை, வழக்குகள் என அனைத்தையும் எதிர்நின்று சாதித்தார் எடிசன்.

இதன் இடைவெளிகளில் அவர் மண‌முடிக்கவே அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் ‘டாட்,டாஷ்’ என தந்தி சங்கேத மொழியிலேயே செல்லப் பெயரிட்டார்.

சினிமா, புகைப்படக் கலை வளர்ச்சிக்கு எடிசன் தான் முழுமுதற் உழைப்பாளி என்றால் அது மிகையாகாது. ஆம் ஒளிப்பதிவுக் கருவியையும், பேச்சு வரும் கைநெட்டோபோன் கருவியையும் எடிசனே கண்டறிந்தார்.

எடிசன் கண்டுப்பிடிப்புகளின் நினைவாக அவரது நெருங்கிய நண்பர் ‘ஹென்றி போர்ட்’ அவரது ‘சோதனைச் சாலையை’அருங்கட்சியகமாகவே மாற்றி அமைத்தார். வாழ்வின் இறுதி நாட்களில் சுயநினைவற்ற கோமா நிலையில் இருக்கும்போதே எடிசனின் உயிர் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள ‘க்லேன்மொன்ட்’ எனப்படும் அவர் இல்லத்தில் பிரிந்தது.

அண்டம் கட‌வுளால் தான் உருவாகிறது என்பதை பொய்ப்பித்துக்காட்டி விஞ்ஞானத்திலே இவ்வுலகம் சுழல்கிறது என்று நிரூபித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சான்றாக வெற்றிக்கான ஆன்ம‌ பலத்தோடு வாழ்ந்து சாதித்தவர் எடிசன்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s