ரசமணி

இந்த ரசமணி, குளிகைன்னா ஏதோ மந்திரம் மாயம் என நினைச்சுகிடறாங்க. அப்படியெல்லாம் இல்லை. ஒரு மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட பலவழிகள் வச்சிருப்பாங்க. அதாவது இப்போ நாம சின்ன சின்ன மாத்திரையாக ஒரு வேளைக்கு ஒரு நாளைக்கின்னு எடுத்துக்கிறத தானா நடக்கிற மாதிரி பண்ணுவாங்க. இது செய்யனும் அப்படீன்னும் அவசியம் இல்லை வேர்கள், காய்கள் கூட இப்படி இருக்கும். உதாரணத்திற்கு எங

்கள் ஊர் பக்கத்தில் காமாலைக்கு ஒரு வேர் கட்டுவாங்க. விரல் பருமனுக்கு விரல் கணு நீளத்திற்கு ஒரு பத்து இருபது வேர் துண்டுகளை கோர்த்து கழுத்தில் கட்டிவிட்டுவாங்க. அது சுண்ட சுண்ட காமாலை குறைஞ்சுடும். வேறெந்த மருந்தும் பத்தியமும் தேவையில்லை. அது சுண்டும் வரையில் கழுத்திலே போட்டிருக்கவேண்டும் அவ்வளவு தான்.

இது போல் இன்றும் உண்டு. அமெரிக்க ராணுவத்திலே வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொண்டு மணிகளை மாலையாக கோர்த்து தருவார்கள். தாக்குதலிலே காயம் பட்டால் உடனடியாக அதை எடுத்து வைத்து கட்டிவிடலாம். அது நோய்தொடுப்பு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளும். மருத்துவர் உதவி கிட்டும்போது சரியான மருத்துவம் செய்து கொள்ளலாம். இதைச்சொல்லி இது தான் அது என சொல்லவில்லை, இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மருந்தை வெளியிடும் முறை பரவலாக உண்டு என ஓர் உதாரணம்.

இப்படியாக செய்வதை ஆவாகனம் என்று கூடச்சொல்லுவார்கள். சாதாரணமாக இருக்கும் கல் தெய்வ சக்தி ஆவாகனம் செய்யப்பட்ட பிறகே வழிபடப்படும். அதே போல் ஆபத்தான பாதரசம் கட்டப்பட்டு இப்படியாக மருந்துகள் உள்ளே ஏற்றப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டவுடன் மருந்தாக மூலிகையாக ஆகிறது. ஆலகால விஷம் சிவனால் அருந்தப்படும் போது சிந்திய விஷத்தையே விஷச்செடிகளும் விலங்குகளும் ஏற்றுக்கொண்டு அப்படியாக ஆயின என சொல்லப்படுகிறது. பதஞ்சலி முனிவர் யோகசூத்திரத்திலே ஒன்று இன்னோன்றை ஏற்றுக்கொண்டு பரிமாணம் அடையும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த பாதரசத்தை கட்டி என்றாலே நம்மாட்களுக்கு ஒரு கிளு கிளுப்பு உண்டாகிவிடுகிறது என நினைக்கிறேன். அது ஏதோ பெரிய விஷயம் போல் பேசுவார்கள். ஆனால் பல் அடைக்கப்போனாலே பாதரசம் உடைய சிமெண்ட் தான் பூசுவார்கள் என தெரியவில்லை போலும். அது மட்டுமல்ல இந்த ரசமணி,குளிகை பற்றியெல்லாம் பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலே ஒன்று அதை பால் கறக்கும் மாட்டின் மீது வைத்தால் பால் கறத்தலை நிறுத்திவிடுமாம். இதை ஒருவர் சொன்னபோது பக்கத்தில் நின்றிருந்த விவசாயி கேட்டார், ஏனுங்க பால் கறக்காத மாட்டை பால் கறக்க வைச்சாத்தானுங்களே நல்லது, நல்லாயிருக்கற மாட்டுக்கு மடியை கட்டுனா தாங்காதுங்களே. கள்ளம் கபடமில்லாத உள்ளம் மூடநம்பிக்கைளை ஒரு நொடியில் தூக்கி எறிந்துவிடுகிறது போலும்.

இதைச்செய்வதற்க்கான எல்லா கெமிக்கல் சூத்திரங்களையும் தெளிவாகவே எழுதிவைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். பேட்ச் புராசஸ் என சொல்லப்படும் முறை அப்போதே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அசுத்தங்களை பிரிப்பது, காய்ச்சி வடிகட்டுல் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்ன அளவு முறைகள் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். சதவீதம் பயன்படுத்தினால் எளிதாக செய்துவிடலாம்.

அரசு சித்த வைத்தியத்திற்கும் பல மானியங்கள் தருகிறது. மருந்துகளும் மானிய விலையில் கிடைக்கின்றன நாமோ கொஞ்ச நாளில் தீரக்கூடிய ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றிக்கு வாழ்நாள் பூராவும் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

Leave a comment